மெய் உணர்தல் – 352

திருக்குறள் – துறவறவியல் – மெய் உணர்தல் – குறள் 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு’

 இந்தக் குறளுக்கு பொதுவான விளக்கம்…

‘மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யை உணர்ந்தவருக்கு அறியாமையாகிய இருள் நீங்கி முக்தி (வீடு) கொடுக்கும்.’

இந்த விளக்கம் சரிதான் என்றாலும், எப்படி என்பதைப் பார்ப்போம்.

இந்தக் குறள் துறவறவியலில், மெய் உணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் என்பதால், இந்த இடத்தில் நம் உயிர் ஆற்றல் ஆஜ்னா சக்கரத்தில் நம் உயிர் ஆற்றல் இருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. உயிர் ஆற்றல் ஆஜ்னாவை எட்டி விட்டால், நம் மனம் முழு விழிப்புணர்வில் இருக்கும் (complete alertness). பளிங்கு (crystal) போல் ஆகிவிடும். அனைத்து ஐயப்பாடுகளும் நீங்கி, உண்மைத் தெரிந்து உயர் நிலையில் இருக்கும் நம் உயிர் ஆற்றல். சுருக்கமாகச் சொன்னால் கிட்டத்தட்ட முக்தி அடைந்துவிட்ட நிலை எனலாம். இதுவரை நீரின் தன்மையிலிருந்த (fluid state)  நம் மனம், கெட்டியாகிவிடும் (chitta – pure intelligence).

நம் மனம் தெளிந்த நிலையில் இருப்பதனால், மயக்கங்கள், சந்தேகங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அறியாமை என்னும் இருள் நீங்கி விடும். கிட்டத்தட்ட முகத்தி அடையும் நிலை எனலாம்.