Literature

செந்தமிழும் நாப்பழக்கம்

செந்தமிழும் நாப்பழக்கம்
————————

புத்தம் புது பூமி வேண்டும்! நித்தம் ஒரு வானம் வேண்டும் ! தங்க மழைப்பெய்ய வேண்டும் ! தமிழில் குயில் பாட வேண்டும்!!

வைரமுத்துவின் இந்த பாடலைப்போல நம் பிள்ளைகள் தமிழ் பேசவேண்டும் என்ற ஆசை வெறும் கற்பனையா? எட்டா கணவா? கானல் நீரா?

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்வது போய், எங்கு தமிழ்? எதில் தமிழ்? என்று ஆகிவிட்டது.

ஒரு சமூகத்தின் மொழி, குறிப்பாக தமிழ் மொழி, கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு கருவி, ஒரு ‘communication tool’ மட்டுமல்ல ..அது நம் கலாச்சாரத்தின், நம் பண்பாட்டின் முதுகெலும்பு!!

எப்படி? .. இது சிந்திக்கவேண்டிய ஒன்று.

என்னைச் சுற்றியுள்ள என் உறவுகளை முதலில் எனக்கு காட்டியது என் தமிழ்மொழி!! ஆங்கிலத்தில் ‘uncle’ என்றும் ‘aunty’ என்றும் உள்ள இரண்டே உறவுகளை, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, மாமா, அத்தை, மாமி என்று உறவுகளை தனித்தனியாக பிரித்துக்காட்டி அதன் சிறப்புகளை எனக்கு சொல்லித்தந்தது என் தமிழ்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று புறனாநூற்றின் மூலமாக உலகிலுள்ள அனைவரையும் என் உறவினராக பார்க்கவைத்ததும் என் தமிழ்தான்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று உணரவைத்தது என் ஔவை பாட்டியின் தமிழ் அல்லவா? இன்றும் பல்லாயிரம் மயில்கள் தொலைவில் இருந்தாலும், தொலைபேசி மூலம் நம்மை பலமுறை வழி நடத்துவது நம் அம்மாவின், அப்பாவின் குரல்தானே!!

‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என உரக்க கூறியது தமிழ். விருந்தோம்பல் – தமிழ் எனக்கு ஊட்டியது; வந்தாரை வாழவைத்தல் .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மனித வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், சின்னஞ்சிறு இரண்டடிகள் கொண்டு இந்த உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த திருக்கறள் .. இவையெல்லாம் உலகுக்கு தமிழ் தந்த கொடைகள்!!

காதலையும், வீரத்தையும், பக்தியையும் நம் மீசை புலவன் பாரதியைவிட வேறு யாரால் சொல்லிவிடமுடியும்!! காதலை கன்னியப்படுத்தி, வீரத்திற்கு திலகமிட்டு, பக்தியை மேன்மைப்படுத்தி அவன் பாடிய பாடல்கள் நமக்கு சொல்லித் தந்தவை ஏராளம்!!

‘ஓடப்பர் ஆயிருக்கும் ஏழையப்பர் உடையப்பர் ஆகிட்டால் ஒரு நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ’ என்ற சமத்துவம், புரட்சிக்கவி பாரதிதாசன் நமக்கு உரைத்தது!!

‘எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்’ என்று பாடிய வாலியும் ஒரு சமதுவக்கவி தான்!!

கண்ணதாசன் பாடல்கள் நமக்கு சொல்லித்தராத பாடம் உண்டா?

அறிந்தோ அறியாமலோ நாம் கற்ற, கேட்ட, உனர்ந்த தமிழ் பலவிதத்தில் நம்மை பதப்படுத்தி, மெருகூட்டி நல்வழியில் நடத்திக்கொண்டிருப்பதை நாம் மறுக்கமுடியாது.

பண்பாட்டில் பழமையும், கொண்டாட்டத்தில் குதுகுலமும், நாகரீகத்தில் நவீனமும், விளையாட்டில் வீரியமும், விஞ்ஞானத்தில் வெற்றியும் கொண்ட நாம், ‘யாம் பெற்ற இன்பம் பெறுக எம் மக்கள்’ என்ற வகையில் நம் பிள்ளைகளுக்கும் தமிழ் பேச, எழுத, படிக்க உதவுவோம்!!

என்னைப்போல, கம்பனையும், வள்ளுவனையும், பாரதியையும், பாரதிதாசனையும், வாலியையும், கண்ணதாசனையும் என் சந்ததியினரும் படித்து, களிப்புற்று, வாழ்வாங்கு வாழ வழி வகுப்போம்!!

‘சித்திரமும் கைப்பழக்கம் .. செந்தமிழும் நாப்பழக்கம்’ .. தமிழ் பேச பேச நாவினிக்கும்!!

முயற்சி எடுப்போம்!!

Categories: Literature

2 replies »

  1. well said and have to reach more people. but sad thing is so called Tamil magazine stop publishing Tamil kavithaigal , they are all busy with chasing Flip & political news

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s