Manuscript

என் இயலாமையின் சீற்றம்

அன்றாடம் சமூக ஊடகங்களில் நாம் படிக்கும் நிகழ்வுகளில் சில நம் உணர்வுகளைத் தாக்கிச் செல்லும். காயப்படுத்தும். பொதுவாக நாம் அவைகளைக் கடந்துச் செல்வதே வழக்கம். அதைப்போல் இதையும் கடந்துவிட பெரிதும் முயன்றேன்.  ஆனால்  ஏதோ ஒரு உறுத்தல். தமிழ்ப்பால் கொண்ட பற்றா? கலை யுணர்வா? சுய மரியாதையா? மனிதநேயமா… இல்லை இவை அனைத்தும் கலந்த ஒன்றா புரியவில்லை. என் இயலாமையின் சீற்றம் தான் இப்பதிவு.

அன்று பண்பாட்டுக் கல்வி; இன்றோ மதிப்பெண்ணுக்காக. எங்குத் தொலைத்தோம் மனிதநேயத்தை தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.

மெத்த படித்து மேதைகளானோம். மனிதநேயம் மறந்தோம்.

கேட்கவே செவி கூசும் சொற்கள்… பேசியவர்களுக்கு நா கூசவில்லை. தமிழன் என்று மார்த்தட்டிக்கொள்ளும் அனைவருக்கும் இது சாபக்கேடு. வேறென்ன சொல்ல.

கருத்து மோதலை கையாள எதிர் கருத்துக்கள் கொண்டு வாதாடுவதுதான் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடையாளம். தடித்த சொற்கள் அன்று.

நமைச் சுற்றி சாதி, மதம், மொழி, இனம் என்று வட்டங்கள் போட்டுக்கொள்கிறோம். நம் வட்டத்துக்குள் இருப்பவர் என்ன செய்தாலும் பரவாயில்லை. நாம் இருக்கும் வட்டத்தோடு வேறொன்று  தொடும்போது கோபம் வெறிக்கொண்டு எழுகிறது. இது பேதைமை. இதற்கு ஆங்கிலத்தில்  ‘inferiority complex’ என்றும் சொல்லுவதுண்டு.

Google definition

in·fe·ri·or·i·ty com·plex

noun: inferiority complex

  1. an unrealistic feeling of general inadequacy caused by actual or supposed inferiority in one sphere, sometimes marked by aggressive behavior in compensation.

ஒருவரின் நிறத்தை குறித்து அல்லது வேறு வகையில் செய்யும் தனிமனித தாக்குதல் எந்த வகையில் நாகரிகமானது?

தோலின் வெள்ளை நிறமும், கருத்த நிறமும் புவியியல் சம்பந்தப்பட்டது. இது  அறிவியல். இதில் எப்படி உயர்வும் தாழ்வும்?

பூமியில், தமிழ் நாடு சுமார் 8 degree N க்கும் 11 degree N latitude உள் இருக்கும் ஒரு tropical நிலப்பரப்பு. இது ஒரு உஷ்ணமான பிரதேசம்.  மற்ற பகுதிகளைவிட இந்த பகுதிகளில் சூரியனின் கதிர்கள் நேரடியாகப் படும். அதில் இருக்கும் UV % (ultra violet)  அதிகம் என்பதால் அதனைத் தாக்குப் பிடிக்க ‘மெலனின்’ என்னும் ரசாயனம் இப்பகுதி மக்களுக்கு கூடுதலாக சுரக்கும். இதவே இவர்கள் தோலின் கருமை நிறத்திற்குக் காரணம். இது இயற்கை இவர்களுக்குத் தந்த கவசம்.

இனி தமிழ்? என்று பலர் மனதிலும் வளைந்து நிற்கும் இந்தக் கேள்விக்குறியை நிமிர்த்தி, இனி தமிழ்! என்று ஆச்சரியக்குறி எழும்பும் நிலையை உருவாக்க சம காலத்தில் முற்படும் இலக்கியவாதிகளில் முக்கியமான ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து எனலாம்.

காதலின் ‘விழியில் விழுந்தும்’, ‘வெட்டி வேர் வாசம்’ பிடித்தும் எத்தனைக் காலங்கள் சுற்றிவந்தோம். ‘தில்லானா’வில் ஆடவைத்து ‘ஊர்வசி’யில் நம்மை மயங்கவைத்த நாட்கள் தான் எத்தனை.

‘முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ’ இதற்கு சபாஷ் போட்டதும் நாம் தான்.

திரைப்படப் பாடல்கள் ஒரு பக்கம்… அவருடைய கருவாச்சி காவியமும் கள்ளிக்காட்டு இதிகாசமும் போதுமே இனி தமிழுக்கு பல ஆண்டுகள் பெருமை சேர்க்க. இரண்டையும் படித்து முடித்ததனால் கர்வத்துடன் சொல்வேன் நம் வாழ்வியலின் காவியங்கள் இவை என்று.

பத்மஸ்ரீ, நாட்டின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுகள் பெற்ற தமிழருக்கு தமிழ் நாட்டில் நாம் தரும் கெளரவம்? ஏழு முறை தமிழ் பாடலுக்கு தேசிய விருது பெற்ற ஒரே இந்தியர் என்பதும் நமக்கு பொருட்டன்று.

ஆனால், தமிழ் பாடலுக்கு தேசிய விருது என்றதும் கூசாமல் மார் தட்டிக் கொள்வோம்.

உலகத்திலேயே இந்தியாதான் மிகப்ப பெரிய ஜனநாயக நாடு… பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மரணப் படுக்கையில் இன்று.

நாம் காலையில் என்ன சாப்பிடவேண்டும் என்பதில் இருந்து என்ன படிக்கவேண்டும் என்பதுவரை நம் ‘கார்ப்ரேட்’ முதலாளிகள்  தீர்மானிப்பதுபோல்…நாம் என்ன நினைக்கவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதை நமக்காக மற்றவர்கள்தான் தீர்மானித்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று.

சுயமாக சிந்திக்கும் திறனையே நாம் இழந்துக்கொண்டிருக்கிறோம். சிந்திக்கத் தொடங்குவோம். சுயமாய்ச் சிந்திப்பது ஒரு சுகம். அதில் விடுதலையின் காற்று வீசும்.

-சக்தி

அவரின் கள்ளிக்காட்டு இதிகாசத்தைப் பற்றி என் விமர்சனம்… அன்று படித்துவிட்டு எழுதியது.

https://kalpanaganesaninsights.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/

 

 

Categories: Manuscript

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s